சென்னை: குடிசை வீட்டில் தீ - 4 பேர் பரிதாப சாவு
சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில் குடிசை வீட்டில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மடிப்பாக்கம், பாலையா கார்டன் பகுதியில், ஃபிளாட் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த கட்டடத்தில் வாட்சமேனாக வேலை பார்த்து வந்தவர் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த அசோக்குமார்.
இவர் தனது குடும்பத்தினருடன் தங்குவதற்காக அதே இடத்தில் குடிசை போட்டு தரப்பட்டிருந்தது. அங்கு அசோக் குமார், தனது மனைவி சிவசக்தி, மகன் சீமான், ஒன்றரை வயது மகன் மற்றும் மகள் சுகன்யாவுடன் தங்கியிருந்தார்.
சிவசக்தி சித்தாள் வேலை பார்த்து வந்தார். பகலில் அவர் வேலைக்குப் போய் விடுவார்.
நேற்று இரவு அசோக் குமார் குடும்பத்தினர் தூங்கப் போவதற்கு முன்பு கொசுவர்த்தி சுருளைப் பற்ற வைத்து விட்டுத் தூங்கினர்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில், திடீரென குடிசையில் தீப்பிடித்துக் கொண்டது.
வேகமாக பரவிய தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதையடுத்து போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தகவல் பறந்தது.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் குடிசை வீடு எரிந்து சாம்பலாகி விட்டது. கடும் போராட்டத்திற்கிடையே குடிசை சிதிலங்களை அகற்றிப் பார்த்தபோது அசோக் குமார், அவரது மகன் சீமான், மகள் சுகன்யா ஆகியோர் கருகிக் கிடந்தனர்.
சிவசக்தியும், ஒன்றரை வயது குழந்தையும் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு குழந்தை இறந்து போய் விட்டது. சிவசக்தி தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது?












Click it and Unblock the Notifications