சேலம் வக்கீல் வாயில் 'செலோடேப்' ஒட்டி கொடூரக் கொலை
சேலம்: சேலத்தில் வக்கீலை அவரது காரில் வைத்து கொலை செய்த மர்ம கும்பல், அவரது முகத்தில் செலோடேப்பை ஒட்டிச் சென்றது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அம்மாபேட்டை உடையாப்பட்டி அருகே உள்ள அதிகாரிப்பட்டியை வசிப்பவர் வக்கீல் ராஜேந்திரன். 47 வயதான இவர் காண்டிராக்டராகவும் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு தர்சினி என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் செல்வதாக கூறி தனது காரில் மாலை 6.30 மணிக்கு சென்ற அவர் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் ஒலி அடித்து கொண்டே இருந்தும், ராஜேந்திரன் எடுக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த சுமதி தனது உறவினர்களிடம் தகவல் தெரிவித்தார். அவர்கள் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். கார் எண்ணை குறித்து கொண்ட போலீசார், ராஜேந்திரனை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சேலம், கொண்டலாம்பட்டி பை-பாஸ் ரோடு அருகே கார் ஒன்று தனியாக நிற்பதை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கண்டுபிடித்தனர். கார் எண்ணை வைத்து அது வக்கீல் ராஜேந்திரன் ஓட்டி சென்றது என்பது தெரிய வந்தது.
ரோந்து போலீசார் தகவல் கொடுத்தை அடுத்து இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தார்கள். ராஜேந்திரனின் உறவினர்களும் அங்கு வந்து சேர்ந்தார்கள்.
காரின் கதவுகளை திறக்க உதவும் ரிமோட் இல்லாததை அடுத்து பின்புற கண்ணாடியை உடைத்து கதவு திறக்கப்பட்டது. அப்போது ராஜேந்திரன் இரு இருக்கைகளுக்கு இடையே தலை குப்புற கவிழ்ந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த மர்ம கும்பல், பார்சல் கட்ட பயன்படுத்தப்படும் செலோடேப்பை வைத்து அவரது முகத்தை ஓட்டியது ஏன் என்பது புரியாத புதிராக இருக்கிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications