குடியரசு தினம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை: இந்தியாவின் 60வது குடியரசு தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 60வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் உள்ள வி்மான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், முக்கிய வணிக வளாகங்கள், மக்கள் கூடும் பகுதிகள், வர்த்தக மையங்கள், தியேட்டர்கள் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகரங்களில் இரவு நேர ரோந்து தீவிரமாக்கப்பட்டுள்ளது. நகரின் எல்லைப் பகுதிகளில் தீவிர வாகனத் தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடலோரங்களில் உஷார் நிலை
இதற்கிடையே இலங்கையில் கடும் சண்டை நடந்து வரும் நிலையில், தமிழ கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி ஜெயின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிஜிபி கே.பி.ஜெயின் கூறுகையில், இலங்கையில் நிலவி வரும் சூழலைக் கருத்தில் கொண்டு தமிழக கடலோரப் பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நடந்து வரும் சம்பவங்கள் குறித்து நாங்கள் அறிவோம். எனவே பாதுகாப்பை அதற்கேற்ப பலப்படுத்தி வருகிறோம் என்றார்.
தமிழ சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராஜேந்திரன் கூறுகையில், கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை நிலவரம் மட்டுமல்லாமல் குடியரசு தினமும் வருவதால் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
அகதிகள் முகாம்களில் தீவிர கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications