சத்துணவு சாப்பிட வந்த குழந்தைகள் சாம்பாரில் விழுந்தன- இருவர் சஸ்பெண்ட்
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் சத்துணவு சாப்பிட வரிசையில் நின்ற இரண்டு குழந்தைகள் கொதிக்கும் சாம்பாரில் விழுந்து, படுகாயம் அடைந்தனர். இதையடுத்து சத்துணவு ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களவனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது.
இந்தப் பள்ளியில் ஏழுமலை மகள் சூர்யா (7) மற்றும் குப்பன் மகள் ஐஸ்வர்யா (6) ஆகிய இருவரும் சத்துணவு வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட நெரிசலில் மாணவிகள் இருவரும் அங்கு பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் சாம்பாரில் விழுந்து விட்டனர்.
இதில் மாணவிகள் இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர்.
தகவல் அறிந்த திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாலகுரு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
குழந்தைகளை பொறுப்புடன் கவனிக்காமல் இச்சம்பவத்திற்கு காரணமாக இருந்த சத்துணவு அமைப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் உதவியாளர் செல்வம் ஆகிய இருவரையும் கலெக்டர் உத்தரவின் பேரில் தற்காலிக பணி நீக்கம் செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications