மும்பை பல்கலை. அலுவலகம் மீது தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
மும்பை: ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், மும்பை பல்கலைக்கழக அலுவலகத்தை இன்று தாக்கி சூறையாடினர்.
இதுகுறித்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கே.வெங்கடேசன் கூறுகையில், எம்.என்.எஸ். கட்சியைச் சேர்ந்த சிலர் தெற்கு மும்பையில் உள்ள பல்கலைக்கழக அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். கண்ணாடி ஜன்னல்களை உடைத்தனர்.
தகவல் அறிந்ததும் போலீஸார் அங்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேல் விசாரணை நடந்து வருகிறது என்றார்.
ராஜ் தாக்கரே கட்சியினர் ஏன் மும்பை பல்கலைக்கழக அலுவலகத்தைத் தாக்கினர் என்ற காரணம் இதுவரை தெரிய வரவில்லை.












Click it and Unblock the Notifications