படுத்தபடி டிவியில் குடியரசு தின விழா பேரணியைப் பார்த்தார் பிரதமர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்து ஓய்வு எடுத்து வரும் பிரதமர் மன்மோகன் சிங், படுக்கையில் படுத்தபடி டிவி மூலம் குடியரசு தின விழா பேரணியை பார்த்து ரசித்தார்.
இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் நேற்று டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் பிரதமரால் பங்கேற்க இயலாமல் போய் விட்டது. பிரதமர் ஒருவர் இல்லாமல் இந்தியாவில் நடந்த முதல் குடியரசு தின விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையி்ல் எய்ம்ஸ் மருத்துவமனையில் குடியரசு தின விழா பேரணியை டிவி மூலம் பிரதமர் பார்த்துள்ளார்.
இதற்கிடையே, பிரதமரின் உடல் நலம் வேகமாக தேறி வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நேற்று காலை அவர் மெதுவாக எழுந்து அமர்ந்து பாதி திட உணவை சாப்பிட்டதாக அது தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications