கருணாநிதி உடல் நலம் குறித்து கனிமொழியிடம் விசாரித்தார் சோனியா
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து, அவரது மகளும், திமுக எம்.பியுமான கனிமொழியிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா விசாரித்துள்ளார். கருணாநிதி விரைவில் குணமடைய வாழ்த்துக்ளையும் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் கருணாநிதி முதுகு வலி காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவ மனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இவருக்கு ஒரு ஓய்வு தேவை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முதல்வரின் உடல்நிலை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா அவரது மகள் கனிமொழியிடம் விசாரித்துள்ளார். அப்போது கருணாநிதி விரைவில் முழுமையாக குணமடைய அவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications