புதுச்சேரியில் குண்டு வீசி கூலித் தொழிலாளி கொலை !
புதுச்சேரி: புதுச்சேரி முதலியார்பேட்டையில் கூலித் தொழிலாளி ஒருவர் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி முதலியார்பேட்டையை சேர்ந்த காந்தி, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் முக்கியப் பொறுப்பில் இருந்தார்.
கடந்த நவம்பர் 5ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தனது வீடுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது மர்ம கும்பல் ஒன்றால் அவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சாந்தமூர்த்தி என்பவர் உட்பட சிலரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் காந்தியின் தம்பி பரசுராமன்(32) சிமெண்ட் கிடங்கு ஒன்றில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
அவர் காரமணி குப்பத்தில் ரெயில்வே கேட் அருகே உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களுடன் பரசுராமனை சரமாரியாக வெட்டியது. மேலும், அவர் மீது நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினர்.
இந்த சம்பவத்தில், பரசுராமன் அதே இடத்தில் துடிதுடிக்க ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த முத்தையால்பேட்டை போலீசார் சம்வ இடத்திற்கு விரைந்து சென்று, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டப் பகலில் நடந்த இந்த படுகொலை புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications