திருச்செந்தூர் டூ சென்னைக்கு பிப். 8 முதல் செந்தூர் எக்ஸ்பிரஸ்
திருச்செந்தூர்: திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை பிப் 8ம் தேதியன்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தொடங்கி வைக்கிறார்.
அன்று காலை டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகிறார் லாலு. பின்னர் அங்கிருந்து திருச்செந்தூர் செல்லும் அவர் அங்கு பிற்பகலில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு செந்தூர் எக்ஸ்பிரசை கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
இவ்விழாவில் ரயில்வே இணை அமைச்சர் வேலு, மத்திய உள்துறை இணை அமைச்சர் ராதிகா செல்வி, எம்பிக்கள், தென்னக ரயில்வே அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
பிப். 8ம் தேதி துவக்க விழா நடப்பதால் அதற்கு முன் ஏற்பாடுகள் தீவிரப்படுத்த மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அணில்சிங்கால், கோட்ட செயலாக்க மேலாயளர் வேலுமணி, கோட்ட பொறியாளர் ராபர்ட் மற்றும் உயர் அதிகாரிகள் இதுகுறித்து திருச்செந்தூரில் இன்று 30ம் தேதி ஆய்வு நடத்துகின்றனர்.
மாலையில் அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் ராதிகா செல்வியுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
புதிய எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு தடம் எண்-6735, திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு தடம் எண்-6736 ஆகியவை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் நெல்லை எக்ஸ்பிரஸ் செல்லும் கார்டு லைனில் இயக்கப்பட உள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications