இனி இலவச கலர் டி.வி காஸ் அடுப்பு கிடைக்குமா? காங். கேள்வி
சென்னை: தமிழகத்தில் இன்னும் பலருக்கு இலவச கலர் டி.வி, காஸ் அடுப்பு ஆகியவை கிடைக்கவில்லை. அது கிடைக்குமா என காங்கிரஸ் கட்சி சட்டசபை விவாதத்தில் கேள்வி எழுப்பியது.
தமிழக சட்டமன்றத்தில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் நடந்தது.
அப்போது சேரன்மகாதேவி காங்கிரஸ் எம்எல்ஏ வேல்துரை பேசுகையில்,
எனது தொகுதியில் பாதி இடங்களில் இலவச கலர் டி.வி, காஸ் அடுப்பு வழங்கப்படவில்லை. எதிர் கட்சி உறுப்பினர்கள் இனிமேல் டி.வி வராது, காஸ் வராது என வதந்தியை பரப்புகின்றனர். எவ்வளவு நாளில் அவை கொடுக்கப்படும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் லீமா ரோஸ் பேசுகையில், கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, ஏழைகளுக்கு மருத்தவு இன்சூரன்ஸ் திட்டத்திற்கான பிரீமியத்தை, எல்.ஐ.சி., ஜி.ஐ.சி.' ஆகியவற்றில் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழக அரசின் மருத்துவமனைகளில் போதுமான டாக்டர்கள், உயிர்காக்கும் வென்டிலேட்டர்' கருவிகள் இல்லை. திருமண உதவி திட்டத்தின்கீழ், நிதி உதவி மிகவும் தாமதமாகத்தான் கிடைக்கிறது. திருமணமாகி அந்த பெண்களுக்கு குழந்தை பிறந்தபிறகுகூட நிதி கிடைக்காத நிலை உள்ளது.
இதுபோல் கர்ப்பிணி உதவி திட்டம், முதியோர் உதவி திட்டம், விதவை உதவி தொகை திட்டம் ஆகியவற்றை பெறுவதற்கும்
பெண்கள் அலைய வேண்டியதுள்ளது. நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள உள்ளாட்சிகளுக்கு அரசு நிதி உதவி தரவேண்டும் என்றார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications