ஜனநாயகன் பார்த்து அழுத அமைச்சரை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்... என்ன இப்படி சொல்லிட்டாரு!
சென்னை: பல மாதங்கள் எதிர்பார்ப்புக்குப் பிறகு இன்று ஜனநாயகன் படம் உலகம் முழுவதும் தியேட்டரில் வெளியாகி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாலையில் தியேட்டரில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து பாலபிஷேகம் செய்து மேளதாளம், விசில் என திருவிழா சூழல் நிலவி வருகிறது. அதே நேரத்தில் ஜனநாயகன் பார்த்து அமைச்சர் பர்வேஸ் அழுது கொண்டிருந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜனநாயகன் படத்தை பார்த்த பல ரசிகர்களும், திரை விமர்சகர்களும் சோசியல் மீடியா பக்கத்தில் படத்தை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். ஒரு சிலர் இதில் சின்ன சின்ன குறைகள் இருப்பதாக குறிப்பிட்டாலும் பலர் படத்தின் ஆரம்பக் காட்சியை அடிபொலியாக இருக்கிறது என்று சொல்லி வருகிறார்கள். இந்த நிலையில் தான் படத்தின் விஜய்யின் இண்ட்ரொடக்சன் காட்சியை பார்த்ததும் பர்வேஸ் உணர்ச்சிவசப்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் கைகுட்டையால் துடைத்தது போன்று அந்த வீடியோவில் இருக்கிறது.
ப்ளூ சட்டை மாறன் பதிவு
இந்த வீடியோ வெளியானதும் ரசிகர்கள் விஜய்யின் கடைசி படம் என்பதால் அமைச்சர் உணர்ச்சிவசப்பட்டார் என்று அதை சோசியல் மீடியாவில் பரப்பி வருகின்றனர். அதோடு இந்த படத்தில் அமைச்சரே அழுகிற அளவிற்கு அப்படி என்னதான் இருக்கிறது என்ற கேள்வியையும் பலரும் எழுப்பி வருகின்றனர். இந்த சூழலில் தான் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அமைச்சர் அழுத சில புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் அந்த பதிவில், "இப்போ இத பார்த்து நாங்களும் அழுகணுமா?" என்று கிண்டலாக பதிவு செய்திருக்கிறார். இந்தப் பதிவு சோசியல் மீடியாவில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பதிவுக்கு விஜயின் ரசிகர்கள் ஒருவரின் உணர்ச்சியை கூட கிண்டல் செய்ய வேண்டுமா? ஒரு ரசிகர் அல்லது ஆதரவாளர் விஜயின் கடைசி படம் என்ற பீலிங்கில் அழுகிறார் அதை இவர் இப்படி பேசுகிறாரே என்று திட்டி தீர்த்து வருகின்றனர்.

ரசிகர்கள் கருத்து
அதே நேரத்தில் ப்ளூ சட்டை மாறனுக்காகவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஒரு படத்தை பார்க்கும் போது அமைச்சர் இவ்வளவு உணர்ச்சிவசப்படுவது இயல்பான? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் விஜய்யின் இண்ட்ரொடக்சன் காட்சியில் அவர் சட்டசபையில் ஸ்டாலினை கிண்டல் செய்வது போல செய்த சைகையை வைத்திருப்பதால் அதை திமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே இப்போ அமைச்சர் அழுததும் பேசப்படுகிறது. அமைச்சருக்கு எத்தனையோ பொறுப்புகள் இருக்கிறது அதையெல்லாம் விட்டுவிட்டு அவர் ஒரு சினிமா பார்த்து அழுது கொண்டிருக்கிறார் என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.


Click it and Unblock the Notifications
