நவீன்சாவ்லாவை நீக்குக - கோபாலசாமி போர்க்கொடி

Subscribe to Oneindia Tamil

Gopalsamy and Navin Chawla
டெல்லி: பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை உடனடியாக நீக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு இதுதொடர்பான பரிந்துரைக் கடிதத்தை கோபாலசாமி அனுப்பி வைத்துள்ளார்.

தனது கடிதத்தில், பிரிவினைவாதப் போக்குடன் நவீன் சாவ்லா செயல்பட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார் கோபாலசாமி.

பொதுத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையர்களுக்குள் ஏற்பட்டுள்ள மோதல், தேர்தல் ஆணையத்தை பெரும் நெருக்கடிக்குள்ளாக்கும் அபாயம் எழுந்துள்ளது. மேலும் அரசியல் நெருக்கடியும் ஏற்படும் சூழல் எழுந்துள்ளது.

ஏப்ரல் 20ம் தேதி கோபாலசாமி ஓய்வு பெறவுள்ளார். அவரைத் தொடர்ந்து தலைமைத் தேர்தல் ஆணையராக நவீன் சாவ்லாதான் பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்த்கது.

ஏற்கனவே நவீன் சாவ்லாவை நீக்க வேண்டும் என பாஜக தீவிரமாக கோரி வருகிறது. சாவ்லா ஒரு காங்கிரஸ் காரர். அவரால் காங்கிரஸ் கட்சிதான் பலனடைந்து வருகிறது. நடு நிலையுடன் அவர் செயல்படுவதில்லை என்று தொடர்ந்து பாஜக குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+