பாக். எந்த தகவலும் தரவில்லை: பிரணாப்
டெல்லி: மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அரசு, இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் தகவல் எதுவும் தரவில்லை. இது சம்பந்தமாக இதுவரை அதிகாரப்பூர்வமாக பதில் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
மும்பை தாக்குதல் சம்பவ விசாரணையில் பாகிஸ்தான் தொடர்ந்து குழப்பி வருகிறது. நேற்று முன்தினம் பாகிஸ்தான் ஹை கமிஷ்னர் ஷாகித் மாலிக் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்து அவரிடம் தங்களது விசாரணை குறித்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேசி கூறியுள்ளார்.
ஆனால், இதை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மறுத்துள்ளார்.
அவர் கூறுகையில், பாகிஸ்தான் ஹை கமிஷ்னர் மரியாதை நிமித்தமாக, இந்திய உள்துறை அமைச்சரை சிதம்பரத்தை சந்தித்துள்ளார். அப்போது அவர் மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக எந்த தகவலையும் அளிக்கவில்லை.
பாகிஸ்தான் பிரதமர் கிலானி உட்பட அந்நாட்டு அதிகாரிகள் இது தொடர்பாக மீடியாவில் பேட்டி கொடுத்ததன் மூலம் தான் தெரிந்து கொண்டோம்.
மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை பாகிஸ்தான் அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எங்களுக்கு தெரிவிக்கவில்லை என்பதை தற்போது நான் கோடிட்டு காட்ட விரும்புகிறேன். அவர்களின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்றார் பிரணாப்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications