வீட்டுக்கடன்: ஸ்டேட் வங்கி வட்டி இனி 8%!!

சர்வதேச நிதி நிலையைக் கருத்தில் கொண்டு, இந்தியப் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி பல நிதிச் சலுகைகளை அளித்தது. ஆனால் அந்த சலுகைகள் வணிக வங்கிகள் சரிவர அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தின.
இதனால் பொருளாதாரம் முடங்கிப் போகும் அபாயம் உள்ளதாகவும், வணிக வங்கிகள் உடனடியாக ரிசர்வ் வங்கியின் சலுகைகளை சாதாரண வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவித்தது ரிசர்வ் வங்கி.
இதைத் தொடர்ந்து உடனடியாக வட்டிக் குறைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது ஸ்டேட் வங்கி.
முதல் கட்டமாக வீட்டுக் கடன்களுக்கு 11 சதவிகிதம் வரை வசூலிக்கப்பட்டு வந்த வட்டியை இப்போது 8 சதவிகிதமாக்கியுள்ளது.
நாளை முதல் அமலுக்கு வரும் இந்தப் புதிய வட்டி விகிதம் 12 வாரங்கள் அமலில் இருக்கும். அதன் பிறகு நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு புதிய விகிதம் அறிவிக்கப்படும் என ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய அறிவிப்பால் ஏற்கெனவே கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு எந்த பலனும் இல்லை. புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.
ஸ்டேட் வங்கியின் இந்த வட்டிக் குறைப்பைத் தொடர்ந்து இதர அரசு வங்கிகளும் வட்டிகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications