நவீன் சாவ்லா மீது விரைவில் நடவடிக்கை - பாஜக வலியுறுத்தல்
டெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமியின் பரிந்துரையை ஏற்று, தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை உடனடியாக நீக்க வேண்டும் என பாஜக தெரிவித்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி வரும் ஏப்ரல் 20ம் தேதி ஓய்வு பெறவுள்ளார். அவருக்கு பின்னர் இப்பொறுப்புக்கு தற்போதைய தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாதான் வரவிருக்கிறார்.
இந்நிலையில் கோபால்சாமி நவீன் சாவ்லா பிரிவினைவாதப் போக்குடன் செயல்பட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டி, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலை விரைவில் தீர்க்க வேண்டும். அதற்கு நவீன் சாவ்லாவை நீக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
பாஜக செய்திதொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறுகையில், தேர்தல் ஆணையாளர் ஒருவரை நீக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு தலைமை தேர்தல் ஆணையாளர் கடிதம் எழுதியிருக்கிறார்.
தேர்தல் ஆணையத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் உறுதியான முடிவு எடுக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை சீர்குலைத்துவிடும். அது ஜனநாயகத்துக்கு பெரும் சிக்கலாக அமையும்.
சிபிஐ எதிர்ப்பு
இது குறித்து சிபிஐ தேசிய செயலர் ராஜா கூறுகையில், அடுத்த தலைமை தேர்தல் ஆணையாளராக வரவிருக்கும் நவீன் சாவ்லா நீக்கப்பட வேண்டும் என கோபாலசாமி கூறியுள்ளார்.
பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில், இப்படி ஒரு பரிந்துரையை தலைமை தேர்தல் ஆணையர் அனுப்ப வேண்டிய அவசியம் என்ன. இதில் உள் நோக்கம் இரு்பபதாக சந்தேகிக்கிறோம்.
தேர்தல் ஆணையத்தின் உரிமை, அதிகாரம், செயல்பாடு ஆகியவை குறித்து பாராளுமன்றத்தில் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
சட்ட சிக்கல்கள் - காங்.
கோபாலசாமியின் பரி்ந்துரையில் பல சட்ட சிக்கல்கள் உள்ளன. முதலில் அவரால் இப்படி ஒரு பரிந்துரையை அனுப்ப முடியுமா, அதற்கான உரிமை அவருக்கு உள்ளதா என்பது சட்ட ரீதியாக ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று.
தற்போது கோபாலசாமியின் பரிந்துரை மத்திய அரசிடம் அனுப்பப்பட்டுள்ளது. அரசு இதுகுறித்து உரிய முறையி்ல் பரிசீலித்து முடிவெடுக்கும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
நான் ஏன் விலக வேண்டும் - சாவ்லா கேள்வி
இதற்கிடையே, நான் ஏன் பதவி விலக வேண்டும் என்று நவீன் சாவ்லா கேட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது முழுக் கவனமும் பொதுத் தேர்தலை எப்படி நடத்துவது என்பதில்தான் உள்ளது. மற்றவை குறித்து கவனிக்க, கவலைப்பட எனக்கு நேரமில்லை. தலைமைத் தேர்தல் ஆணையரின் கடிதம் குறித்து எனக்குத் தெரியாது என்றார்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications