தொடர்ந்து சரிவுப் பாதையில் இந்திய ஏற்றுமதி
டெல்லி: இந்திய ஏற்றுமதி தொடர்நது 3வது மாதமாக கடந்த டிசம்பரில் 1.1 சதவீதம் சரிவு கண்டுள்ளது. இதே நிலை நீடித்தால் வரும் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி துறையில் இருக்கும் 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
உலக பொருளாதார மந்தநிலையை தொடர்ந்து இந்தியாவின் ஏற்றுமதி கடந்த டிசம்பர் மாதம் கடந்த ஆண்டை விட 1.1 சதவீதம் குறைந்து 12.7 பில்லியன் டாலர் என்ற அளவில் இருந்தது.
அதேநேரத்தில் இந்தியாவின் இறக்குமதி டிசம்பர் மாதத்தில் 8.8 சதவீதம் உயர்ந்து 20.3 பில்லியன் டாலராக இருந்தது. இதனால் வர்த்தக பற்றாக்குறை 7.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இது குறித்து இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு கூறுகையில், விவசாயத்துக்கு அடுத்து, ஏற்றுமதி துறையில் தான் அதிக அளவிலான இந்தியர்கள் ஈடுபடுகின்றனர். ஏற்றுமதி தொடர்பான நிறுவனங்களில் 15 கோடி பேர் இருக்கின்றனர்.
தற்போதுள்ள ஏற்றுமதி துறை சரிவு நிலை நீடித்தால் ஏற்றுமதி துறையில் 1 கோடி பேருக்கு வேலையிழப்பு ஏற்படும். இது வரும் பாராளுமன்ற தேர்தலில் மன்மோகன் அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்கிறது அது.
டெல்லியை சேர்ந்த பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தை பைய் பனான்டிகர் கூறுகையில், உலக பொருளாதாரம் நல்ல நிலைக்கு வராதபட்சத்தில் ஏற்றுமதியில் எந்த முன்னேற்றமும் இருக்காது என்றார்.
இந்தியாவை போல் மற்ற ஆசிய நாடுகளின் வளர்ச்சியும் பெரிதும் பாதிக்கப்பட்டு்ள்ளது. சீனாவின் ஏற்றுமதி 2.8 சதவீதம் குறைந்துள்ளது. சிங்கப்பூரின் ஏற்றுமதி 6 ஆண்டுகளில் இல்லாத வகையில் சரிவு கண்டுள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications