4 மாதங்களில் 4 லட்சம் கோடி: ரிசர்வ் வங்கியின் சலுகை சாதனை!
டெல்லி: இந்தியப் பொருளாதாரத்தை, சர்வதேச பொருளாதார மநம்த பாதிப்பிலிருந்து காப்பாற்ற கடந்த 4 மாதங்களில் மட்டும் 4 லட்சம் கோடி நிதிச் சலுகைகளை வழங்கி சாதனைப் படைத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
2008 செப்டம்பர் முதல் 4 மாதங்களில் ரிசர்வ் வங்கியின் பலவித வட்டிக் குறைப்பு நடவடிக்கையால் சுமார் ரூ.4 லட்சம் கோடி தொகை புழக்கத்துக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட 2008-09ம் ஆண்டுக்கான நிதிக் கொள்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரையான 4 மாதங்களில் நிதிச் சந்தையில் தாராள புழக்கத்துக்கு ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்தது. அவற்றின் காரணமாக இதுவரை ரூ.4.28 லட்சம் கோடி புழக்கத்துக்கு வந்தது.
செப்டம்பரில் ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் இருப்பு வைக்க வேண்டிய தொகை மீதான (சிஆர்ஆர்) வட்டிக் குறைப்பின் மூலம் மட்டும் வங்கிகள் கடன்களை தாராளமாக அளிக்கும் வகையில் நிதிப் புழக்கம் ரூ.1.6 லட்சம் கோடி அதிகரிக்கப்பட்டது.
அது தவிர, பல்வேறு வழிகளில் வங்கிகளுக்கு மேலும் ரூ.63,000 கோடி நிதியை ரிசர்வ் வங்கி விடுவித்தது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய காலக் கடனுக்கான (ரெபோ) வட்டியையும் ரிசர்வ் வங்கி கடந்த 4 மாதங்களில் பலமுறை 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை குறைத்தது. அதனால் முறையே ரூ.80,000 கோடி, ரூ.60,000 கோடி நிதி வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டது.
வங்கி சாராத நிதி நிறுவனங்களின் சீரான செயல்பாடுக்காக சிறப்பு நிதித் திட்டத்தை சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்மூலம் நிதிச் சந்தையில் மேலும் ரூ.25,000 கோடி விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
500 ரூபாய் நோட்டுகளுக்கு புதிய சிக்கல்? ஏடிஎம்களில் இனி 700 ரூபாய் தான் புழக்கத்திற்கு வருகிறதா -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
உங்கள் வீட்டு லோன் இஎம்ஐ குறையுமா? ரிசர்வ் வங்கி முடிவு என்ன.. கீதா கோபிநாத் பேட்டி -
விலைவாசி தாறுமாறாக உயரப்போகுது.. ரிசர்வ் வங்கியே சொல்லிவிட்டது.. அப்போ நாட்டின் ஜிடிபி நிலைமை என்ன? -
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. 5.25% தொடரும்.. வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
உங்களுக்கு அவசரப் பணத் தேவை இருந்தால் எங்களிடம் வாருங்கள்.. ஆர்பிஐ அவசர அழைப்பு.. யாருக்கு? -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி












Click it and Unblock the Notifications