பாக். கேட்டால் கூடுதல் தகவல் கொடுக்கப்படும்: பிரணாப்
பெர்காம்பூர்: மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் தகவல் வேண்டும் என பாகிஸ்தான் கேட்டுக் கொண்டால் அவர்களுக்கு அது தரப்படும் என வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு இருக்கும் தொடர்பை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை சமீபத்தில் இந்தியா பாகிஸ்தானுக்கு வழங்கியது. முதலில் ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என கூறிய பாகிஸ்தான், பின்னர் அது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்தது.
சமீபத்தில் பாகிஸ்தான் தூதர் ஷாகித் மாலிக் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்து அவரிடம் தங்களது விசாரணை குறித்து தகவல்கள் தெரிவித்ததாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேசி கூறினார்.
ஆனால், இதை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மறுத்து விட்டார்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் பெர்காம்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், பாகிஸ்தான் இதுவரை இந்தியாவிடம் எந்த தகவலும் அளிக்கவில்லை. அவர்களுக்கு தேவைப்பட்டால் கூடுதல் தகவல் அளிக்க தயாராக இருக்கிறோம் என்றார்.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications