மும்பையில் ரயில் மறியல் - போக்குவரத்து ஸ்தம்பித்தது
மும்பை: மும்பையில் ரயில் ஒன்று ரத்து செய்யப்பட்டதை அடுத்து பயணிகள் கூட்டமாக திரண்டு ரயில் மறியலில் ஈடுபட்டனர். கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது.
மும்பையில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலை பயன்படுத்துகின்றனர். ஆனால் ரயில் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் கூட்டம் தொற்றிக் கொண்டு போகும். இதனால் பொரிவலி பகுதியில் இருந்து சர்ச்கேட் பகுதிக்கு அதிக ரயில்கள் விட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை ரயில் ஒன்று மிகவும் தாமதமான காரணத்தால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கொதிப்படைந்த பயணிகள் ஆயிரக்கணக்கில் திரண்டு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மற்ற ரயில்களும் தாமதமாகின. மேற்கு ரயில்வே ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்து போனது.
ரயில்வே போலீசார் ஒருவர் கூறுகையில், காலை 9.18 மணிக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் பொரிவலியில் இருந்து ஒரு ரயிலை கூட வெளியேற அனுமதிக்கவில்லை.
இதனால் ரயில் போக்குவரத்து சுத்தமாக நின்று போனது. கூட்டத்தினர் எவ்வளவு கூறியும் கலைந்து போகாததை அடுத்து லத்திசார்ஜ் செய்து அகற்றப்பட்டது என்றார்.
அப்பகுதியின் காங்கிரஸ் எம்.பி.யும், பாலிவுட் நடிகருமான கோவிந்தா கூறுகையி்ல், கடந்த 5 ஆண்டுகளில் இப்பகுதியில் அதிக ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. பயணிகளை யாரோ வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் தூண்டியுள்ளனர் என்றார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications