சுதந்திர தின விழாவில் தமிழில் பேசிய ராஜபக்சே
கொழும்பு: இலங்கை சுதந்திர தின விழாவில் பேசிய அதிபர் ராஜபக்சே, அவ்வப்போது தமிழிலும் பேசினார்.
கடந்த ஆணடு ஐ.நா. கூட்டத்தில் பேசிய ராஜபக்சே திடீரென தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஐ.நா. சபையில் முதன் முதலில் தமிழில் பேசிய தலைவர் இவர்தான்.
இருப்பினும் தமிழர்களை கவரவும், உலக சமுதாயத்தினருக்கு தான் தமிழர்கள் மீதும், தமிழ் மொழியின் மீதும் பாசத்துடன்தான் இருப்பதாக காட்டிக் கொள்ளவுமே இவ்வாறு ராஜபக்சே தமிழில் பேசியதாக கருத்து எழுந்தது.
பின்னர் சமீபத்தில் தமிழில் ராஜபக்சே பேசியதன் வீடியோ தொகுப்பு வடக்கிலும், கிழக்கிலும் மக்களுக்குப் போட்டுக் காட்டப்பட்டது.
இந்த நிலையில் கொழும்பில் நேற்று நடந்த இலங்கை சுதந்திர தின விழாவின்போது சிங்களத்துக்கு இடையே தமிழிலும் அவ்வப்போது பேசினார் ராஜபக்சே.
நாம் எல்லோரும் ஒரு தாய்க்கு பிறந்து இருக்கிறோம். தமிழர்களுக்கு சம அந்தஸ்து வழங்குவோம். வடக்கு பகுதியில் வாழும் தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு, அங்கு ஆக்கபூர்வ பணிகளை மேற்கொள்வோம் என்று தமிழில் கூறினார் ராஜபக்சே.
அதேபோல, இலங்கையில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் நலனில் அக்கறைகொள்வது எனது கடமை. அதை முழுமையாக செய்வேன். சிங்கள மக்கள், எந்த வித வேறுபாடும் இன்றி செயல்பட வேண்டும் என்றும் தமிழில் கேட்டுக் கொண்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications