இலங்கை: அதிமுக நிலையால் ஆத்திரம் - கட்சி கரை வேட்டியை கொளுத்திய தொண்டர்
தூத்துக்குடி: இலங்கை பிரச்சினையில் தனது கட்சியின் தலைமை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கொதித்த அதிமுக தொண்டர் ஒருவர் தனது கரைவேட்டியை தீ வைத்து கொளுத்தினார்.
தூத்துக்குடி போல்டன்புரம் 1வது தெருவை சேர்ந்தவர் சக்திவேல். அதிமுக தொண்டரான இவர் சிவந்தாகுளம் சந்திப்பில் புரோட்டா கடை நடத்தி வருகிறார். மாலை சக்திவேல் தனது நண்பர் ராமசாமிபுரம் 2வது தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது இலங்கை தமிழர் தாக்கப்படுவது பற்றி பேச்சு வரவே திடீரென்று ஆவேசமடைந்த சக்திவேல் தான் அணிந்திருந்த அதிமுக கட்சி கரை வேட்டியை அவிழ்த்து வீசினார்.
பின்னர் வேட்டியின் மீது மண்எண்ணெய் ஊற்றி தீவைத்தார். இலங்கையில் தமிழர் தாக்கப்படும் சம்பவத்தில் தமது கட்சி சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கதறியபடியே கோஷம் எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் விரைந்து சென்று சக்திவேல், அவரது நண்பர் சண்முகசுந்தரம் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்து வருகிறார்.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications