மயிலாடுதுறையில் டிஎஸ்பி மூக்கு உடைப்பு!
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டிஎஸ்பியின் மூக்கை உடைத்த நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சீர்காழியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ரவிச்சந்திரன் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக கடந்த 7ம் தேதி அன்று தீக்குளித்து பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை பார்ப்பதற்கு திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் வந்துள்ளனர்.
அவர்கள் மருத்துவமனையை விட்டு வெளியேற வேண்டும் என்று தனசேகரன் என்பவர் சத்தமிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் அவர் மீது பாய்ந்து அடிக்க முயன்றனர். இதையடுத்து அங்கு வந்து டிஎஸ்பி ராமமூர்த்தி சமரசம் செய்ய முயற்சித்தார்.
அந்த தருணத்தில் ஆத்திரத்தில் ஒருவர் டிஎஸ்பி மீது கல் வீசி தாக்கினார். இதில் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் அவருக்கு மருத்துவமனையில் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது பற்றி மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து டிஎஸ்பி ராமமூர்த்தியின் மூக்கை உடைத்த மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications