இஸ்ரேல் தேர்தலில் மகா இழுபறி

வாக்குப் பதிவுக்குப் பின் நடந்த கருத்துக் கணிப்பின்படி முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவி் லிகுட் கட்சியும் வெளியுறவு அமைச்சர் ஸிபி லிவினியின் கடிமா கட்சியும் கிட்டத்தட்ட சரிசமமான இடங்களை வெல்லும் எனத் தெரியவந்துள்ளது.
மொத்தமுள்ள 120 இடங்களில் லிவினியின் கட்சி 28 இடங்களிலும், நெதன்யாகுவின் கட்சி 27 இடங்களிலும் வெல்லும் எனத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இரு கட்சிகளுமே ஆட்சியமைக்க இப்போதே உரிமை கோர ஆரம்பித்துவிட்டன.
ஆனால், நெதன்யாகுவுக்கு பிற வலதுசாரிக் கட்சிகளின் தலைவர்களான அவிக்டோர் லிபர்மேன், பாதுகாப்பு அமைச்சரான எகுட் பராக் (இவரும் முன்னாள் பிரதமரே) ஆகியோரின் கட்சிகள் ஆதரவு தரும் என எதி்ர்பார்க்கப்படுகிறது. இந்தக் கட்சிகள் தலா 15, 13 இடங்களில் வெல்லும் எனத் தெரிய வந்துள்ளது.
அடிப்படைவாத போக்கு கொண்ட லிபர்மென், பராக் ஆகியோர் அதே கொள்கை உடைய நெதன்யாகுவை ஆதரிக்கவுள்ளதால் அவரே ஆட்சியமைப்பார் எனத் தெரிகிறது.
ஸிபி லிவினி கொஞ்சம் நடுநிலையான போக்கு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரை ஆட்சிக்கு வர விடாமல் இந்த மூவரும் தடுப்பது உறுதி என்கின்றனர் இஸ்ரேல் பார்வையாளர்கள்.
அதிகாரப்பூர்வமான முடிவு அடுத்த வாரம் தான் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இஸ்ரேலில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தேர்தல் முடிவோடு கிட்டத்தட்ட ஒத்துப் போவது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தல் முடிவுகளுக்குப் பின் இஸ்ரேல் அதிபரான சிமோன் பெரஸ் யாரை ஆட்சியமைக்க அழைப்பது என்பதை முடிவு செய்வார். பெரும்பான்மைமையை நிரூபிக்க 42 நாட்கள் கால அவகாசம் தரப்படுவது இஸ்ரேலில் வழக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து வைத்துள்ள இஸ்ரேலில் 53 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications