இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 17ம் தேதி மனித சங்கிலி போராட்டம்: திருமாவளவன்.
சென்னை: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வருகிற 17ம் தேதி கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை பிரமாண்ட மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் 24 மணி நேரமும் தாக்குதல் நடத்தி வருகிறது இத்தாக்குததில் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்து வருகிறார்கள்.
ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக்கான பொறுப் பையும் இந்திய அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்றும் சிங்கள அரசைப் பணிய வைத்து தமிழீழத்தில் ஓர் அமைதிச் சூழலையும் அரசியல் தீர்வையும் கொண்டு வர இந்திய அரசு விரைந்து நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.
தமிழக மக்களின் உணர்வு களையும் மதித்து சிங்கள இனவெறிப் போரை நிறுத்த இந்திய அரசு ஆவன செய்ய வேண்டும். இலங்கை தமிழர் பாது காப்பு இயக்கத்தின் சார்பில் வரும் 17 ஆம் தேதி கும்மிடிப்பூண்டியலிருந்து குமரி முனை வரையிலான மனிதச் சங்கிலி அறப்போர் நடைபெறும்.
இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அனைத்துப் பிரிவு தொண்டர்களும் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications