ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீடிப்பு
டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் நான்கு வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் நீடித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியால் பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன, மாடுகளும் வதைக்கப்படுகின்றன. எனவே இந்த விளையாட்டுக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி பிராணிகள் நல வாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 30-ந் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பிப்ரவரி 13-ந் தேதி வரை ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்தது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர் நெடுமாறன், ஜல்லிக்கட்டு தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்ட அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களில் ஒருசிலர் முழுமையான அறிக்கை அளிக்கவில்லை. அவை கிடைத்தவுடன் பதில் மனுதாக்கல் செய்யப்படும்.
எனவே இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய நான்கு வார கால அவகாசம் தேவை என்று கோரினார்.
இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில்,
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிப்பது நீதிமன்றத்தின் நோக்கம் இல்லை. மிருகவதை மற்றும் மனித உயிர்கள் பலியாவதும், காயம் அடைவதும் தவிர்க்கப்பட வேண்டும்.
அதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றி தமிழக அரசும், விலங்குகள் நல வாரியமும் ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.
எனவே மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்று கூறி வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications