கேரள எம்பி மயக்கம்- தடைபட்ட பட்ஜெட்
டெல்லி: பிரணாப் முகர்ஜி பட்ஜெட் தாக்கல் செய்து கொண்டிருந்த போது, கேரளத்தைச் சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளத்தின் எம்பி வீரேந்திர குமார் திடீரென மயங்கி விழுந்ததால் பட்ஜெட் கூட்டம் 10 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது.
வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து படித்துக் கொண்டிருந்தபோது 11.50 அளவில் 73 வயதான வீரேந்திர குமாருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதையடு்த்து சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி பட்ஜெட் கூட்டத்தை 12.00 மணி வரை அதாவது 10 நிமிடம் ஒத்திவைத்தார்.
இதைத் தொடர்ந்து வீரேந்திர குமாருக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், அவருக்கு லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்றார். பின்னர் அவை கூடி பட்ஜெட் தாக்கல் தொடர்ந்தது.
வீரந்திர குமார் மாத்ரூபூமி நாளிதழின் நிர்வாக ஆசிரியருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications