வவுனியா-சன் டிவி மறு ஒளிபரப்பு மைய ஊழியர்கள் கைது
வவுனியா: இலங்கையின் வவுனியாவில் உள்ள சன் டிவியின் மறு ஒளிபரப்பு மையத்தில் பணியாற்றி வந்த 4 ஊழியர்களை அந் நாட்டு போலீஸார் திடீரென கைது செய்துள்ளனர்.
சன் டிவிக்கு, வவுனியாவின், வைரபுளியங்குளம் என்ற இடத்தில் மறு ஒளிபரப்பு மையம் உள்ளது. இந்த மையத்திலிருந்துதான் இலங்கையில் சன் டிவி நிகழ்ச்சிகள் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.
மறு ஒளிபரப்பு மையம் உள்ள கட்டடம், தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி. செல்வம் அடைக்கலநாதனுக்குச் சொந்தமானது. இந்த கட்டடத்தின் ஒரு பகுதியில் சன் டிவி மையமும், இன்னொரு பகுதியில் அடைக்கலநாதனின் அலுவலகமும் உள்ளன.
கடந்த 1ம் தேதி இந்த அலுவலகம் மீது சிலர் கையெறிகுண்டுகளை வீசித் தாக்கினர். அப்போது செல்வம் அடைக்கலநாதன் அங்கு இல்லை. இதில் மையம் லேசாக சேதமடைந்தது.
இந் நிலையில் இந்த அலுவலகத்தில் இலங்கை போலீஸார் சோதனை என்ற பெயரில் நுழைந்து நான்கு ஊழியர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
முறையான உரிமம் இன்றி மறு ஒளிபரப்பு மையம் செயல்படுவதாக கூறி அங்கிருந்த கருவிகளையும் போலீஸார் எடுத்துச் சென்று விட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications