ஆர்எம்கேவி-போத்தீஸில் வருமான வரி ரெய்ட்!
சென்னை: சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக் கடைகளான ஆர்.எம்.கேவி மற்றும் போத்தீஸ் நிறுவனங்களில் அதிரடியாக இன்று காலை 9 மணிமுதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னை, திருநெல்வேலி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போத்தீஸ் கடைகளிலும், அலுவலகம் மற்றும் உரிமையாளர்களின் வீடுகளிலும் ஒரே நேரத்தில் சோதனை நடைபெறுகிறது.
தி.நகர் உஸ்மான் ரோட்டில் உள்ள ஜவுளிக் கடைக்கு அதிகாரிகள் சென்ற போது ஜவுளி எடுக்க வந்த பொதுமக்களும் கடைக்குள் வந்ததால் இடைஞ்சல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களை வெளியே போக சொல்லி ஷட்டரை பூட்டிக் கொண்டு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதனால் கடைகள் மூடப்பட்டுள்ளன. துணி வாங்க வந்த மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கடைகளுக்கு முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதே போல ஆர்எம்கேவி ஜவுளிக் கடைகளிலும் சோதனை நடந்தது. சென்னை உஸ்மான் ரோட்டில் உள்ள கடை, நெல்லை வண்ணாரப் பேட்டையில் உள்ள இதன் கிளை ஆகிய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்ட பின்னரே கடைகள் திறக்கப்படும் எனத் தெரிகிறது. இதனால் தி.நகர், திருநெல்வேலி பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டது.
மேலும் நெல்லை, சென்னை, திருவனந்தபுரத்தில் உள்ள ஆர்.எம்.கே.வி. உரிமையாளர்களின் வீடுகளிலும் ரெய்டந் நடந்தது.
மேலும் போத்தீஸ், ஆர்.எம்.கே.வி. நிறுவனங்களுக்கு சொந்தமாக பட்டு நெசவு கூடங்களும் உள்ளன. காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இந்த கூடங்களிலும் சோதனை நடந்தது.
மொத்தம் 15 இடங்களில் சுமார் 500 வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications