பெண் எஸ்.ஐ.-யிடம் சில்மிஷம் செய்த நபர் கைது
திருப்பூர்: திருப்பூரில் பெண் எஸ்.ஐ.-யிடம் சில்மிஷம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் வடக்கு காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் யசோதா. இவர் பணி முடிந்து பஸ்சில் திருப்பூர் சென்றார்.
அப்போது யசோதா அருகில் ஒரு வாலிபர் நின்று கொண்டு இருந்தார். சப்-இன்ஸ்பெக்டர் யசோதாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத யசோதா அதிர்ச்சி அடைந்தார்.
பின்பு சுதாரித்துக்கொண்டு அவரது செயலை கண்டித்துள்ளார். ஆவேசம் அடைந்த அந்த நபர் யசோதாவை மரியாதை குறைவாக திட்டியதோடு, அவர் மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் யசோதா நிலைகுழைந்து கிழே விழுந்தார்.
இதைக் கண்ட பயணிகள் அந்த நபரை பிடித்து அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் அந்த நபரின் பெயர் அன்பரசு என்றும், அவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்றும் தெரிய வந்தது.
இதனையடுத்து அன்பரசு மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications