கொரிய கப்பல் இன்று கன்னியாகுமரியில் ஆய்வு
கன்னியாகுமரி: விஷ மீன் உண்டு நான்கு ஊழியர்கள் இறந்த விவகாரத்தில் கொரிய கப்பலை சோதனை செய்ய இன்று மெர்க்கன்டைல் மரைன் அதிகாரிகள் கன்னியாகுமரி வருகின்றனர்.
சமீபத்தில் குஜராத்தில் இருந்து 16 ஊழியர்களுடன் கொரிய கப்பல் ஒன்று கன்னியாகுமரி வழியாக வந்து கொண்டிருந்தது. கன்னியாகுமரிக்கு அருகில் வந்த போது கப்பல் நடுக்கடலில் தள்ளாடியது. அதிலிருந்தவர்கள் அனைவரும் மயக்கமடைந்தனர்.
தகவலறிந்த கன்னியாகுமரி போலீசார் மருத்துவ குழுவுடன் உதவிக்கு சென்றனர். அதில் 4 ஊழியர்கள் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் விஷமீன்களை சாப்பிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கப்பலில் இருந்த உணவு பொருட்களின் சாம்பிள்கள் எடுக்கப்பட்டு சென்னை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு சோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கப்பலில் இருந்த உணவு பொருட்களை கரைக்கு கொண்டு வந்து அழித்து விட முடிவு செய்யப்பட்டது.
சோதனை அறிக்கை வந்தபின்னரே கபபல் அங்கிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே கப்பலை ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து மெர்க்கன்டைல் மரைன் அதிகாரிகள் இன்று கன்னியாகுமரி வருகின்றனர். அவர்கள் சான்று அளித்த பின்பே கப்பல் புறப்படும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications