தூத்துக்குடி அருகே லாரி கவிழ்ந்து 4 பேர் பலி
விளாத்திகுளம்: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே லாரி கவிழ்ந்ததில் நான்கு பேர் பலியானார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மேல்மாந்தையிலுள்ள பெத்தநாச்சியம்மன் கோவிலில் மாசி திருவிழா நடைபெற உள்ளது.
விழாவையொட்டி கோவிலில் சமையல் செய்வதற்கு மதுரை மீனாட்சியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பாத்திமா, அவரது மகன் அல்லாபிச்சை ஆகியோர் தலைமையில் அதே பகுதியை சேர்ந்த சாமிநாதன், குழந்தை வேலு, செந்தில் உள்பட 7 பேர் வந்தனர்.
அங்கிருந்து மேல்மாந்தைக்கு செல்லும் கடைசி பஸ் சென்று விட்டதால் அல்லாபிச்சை உள்பட 7 பேரும் அந்த வழியாக வேம்பாருக்கு சென்று கொண்டிருந்த லாரியை மறித்து ஏறிக் கொண்டனர். தங்களை மேல்மாந்தையிலுள்ள கோவில் அருகே இறக்கிவிடுமாறு கூறியுள்ளனர்.
செந்தில் உள்பட 4 பேர் லாரியின் பின்பகுதியிலும், குழந்தைவேலு, அல்லாபிச்சை, பாத்திமா ஆகியோர் முன்பகுதியிலும் இருந்தனர்.
விளாத்திகுளம் அரியநாயகிபுரம் அருகே சென்றபோது லாரி திடீரென டிரைவரின் கட்டுபாட்டை மீறி தாறுமாறாக ஓடி நடுரோட்டில் கவிழ்ந்தது.
இதில் லாரியில் மேல் இருந்த கல் விழுந்து அழுத்தியதில் சாமிநாதன், செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். லாரி டிரைவர் பந்தல்குடியை சேர்ந்த பெருமாள் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் விளாத்திகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜ், அங்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களையும், காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 5 பேரையும் மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இருவர் பலியானார்கள். குழந்தைவேலு, பாத்திமா, அல்லாபிச்சை ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications