மணல் லாரி மோதி 5 வயது சிறுமி பலி!
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மணல் லாரி மோதியதில் 5 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருத்தணி அருகே உள்ளது தாழவேடு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் அபி (எ) அபிநயா (5).
அபி மதிய நேரத்தில் பக்கத்தில் உள்ள தனது பெரியப்பா வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக அசுர வேகத்தில் கட்டுப்பாடு இன்றி ஒரு மணல் லாரி வந்தது.
அந்த லாரி சிறுமி அபிநயா மீது மோதியது. இதில் தலை நசுங்கி அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் ஆவேசம் அடைந்த அக் கிராம மக்கள் சுமார் 300 பேர் திருத்தணி - நாகலாபுரம் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த ஆர்.டி.ஓ., தாசில்தார், டி.எஸ்.பி. ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு மறியல் செய்த மக்களுடன் சமரச பேச்சு நடத்தினார்கள்.
விபத்து நடந்த இடத்தில் ஏற்கனவே 4 குழந்தைகள் பலியாகியிப்பதால், அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications