கார் - லாரி மோதலில் வங்கி மேலாளர், டிரைவர் பலி
கயத்தாறு: நெல்லை மாவட்டம் கயத்தாறு அருகே நடந்த சாலை விபத்தில் வங்கி மேலாளரும், கார் டிரைவரும் பலியானார்கள்.
கோவை மாவட்டம் ராதாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவகுருநாதன். இவருடைய மகன் சண்முகசுந்தரம். இவர் திருப்பூரில் வங்கி மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
வேலை விஷயமாக சண்முகசுந்தரம் நாகர்கோவிலுக்கு காரில் புறப்பட்டார். திருப்பூர் ஆசிரியர் காலனியை சேர்ந்த டிரைவர் ரவிசந்திரன் காரை ஓட்டினார்.
இன்று அதிகாலை 5 மணி அளவில் கயத்தாறு அடுத்த வடக்கு இலந்தைகுளம் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது கோவில்பட்டி நோக்கி சென்ற லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் சண்முகசுந்தரமும், ரவிசந்திரனும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. விபத்து நடந்தவுடன் தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications