தமிழர்களுக்கு மருந்துகள்-பிரதமருக்கு கருணாநிதி கோரிக்கை
சென்னை: ஈழப்போரில் காயமடைந்து சிக்கி தவிக்கும் 10 ஆயிரம் அப்பாவி தமிழர்களை காப்பாற்ற உடனடியாக மருந்து பொருட்கள் அனுப்பி வைக்க வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி, பிரதமருக்கு தந்தி கொடுத்துள்ளார்
இலங்கையில் வாழ்க்கைக்காக போராடி வரும் தமிழர்களை காக்க மருந்து பொருட்களை உடனடியாக அனுப்ப வேண்டும் என கருணாநிதி நேற்று பிரதமருக்கு தந்தி அனுப்பியுள்ளார். அதன் நகல்களை காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும், வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப்புக்கும் அனுப்பியுள்ளார்.
அதில்,
இலங்கை நடைபெற்று போர் பகுதிகளில் இருந்து இதுவரை 36 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் 10 ஆயிரம் பேருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது.
அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து பொருட்கள் இலங்கையில் இல்லை. மனிதாபிமானம் கருதி அவர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும். இவர்களை தவிர்த்து போர்ப் பகுதிகளில் இருக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலத்த காயங்களுடன் சிக்கியுள்ளனர்.
இலங்கைத் தமிழர்களுக்கு மருந்துகளை அனுப்பும் பணியில் மத்திய அரசுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு உதவத் தயாராக இருக்கிறது.
திறமை வாய்ந்த மருத்துவர்களையும், அறுவைச் சிகிச்சை நிபுணர்களையும், துணை மருத்துவ சேவைப் பிரிவைச் சேர்ந்தவர்களையும் அனுப்ப வேண்டும்.
தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்களையும், மருத்துவ ஊழியர்களையும் இலங்கையில் காயத்தால் அவதிப்படுபவர்களுக்கு உதவும் பொருட்டு அனுப்ப தயாராக இருக்கிறோம். அங்கு தமிழர்களுக்கு இந்தியா சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட வேண்டும்.
இதற்காக, இலங்கை அரசுடன் பேசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் விரைவாக நடக்க வேண்டும் என்றார் கருணாநிதி.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications