கருணாநிதி-'ரொம்ப ஓவராய்' துடிக்கும் ஜெகத்ரட்சகன்!
சென்னை: முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தால் உலகம் தாங்காது, உன்னால்தான் உண்ணுகிறோம், ஊர் நலத்தை எண்ணுகிறோம், கள்வர்கள் ஆட்டம் போடுவார்கள் என்று உருக்கமாக கவிதை பாடியுள்ளார் ஜனநாயக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெகத்ரட்சகன்.
இதுதொடர்பாக ஜெகத்ரட்சகன் எழுதியுள்ள கவிதை நடை அறிக்கை..
ஒரு மாதமாக எங்கள் இதயம் ஓரிருமுறை துடிக்கவும் தவறுகிறது! பதைப்பு அலை எங்களைப் பரிதவிக்க வைக்கிறது!
எழுந்து வந்து எங்களைப் பார்க்க இன்னும் எத்தனை நாட்கள்? தம்பி என்ற அழைப்பில் என்னிடம் தாயன்பை காட்டிய தத்துவமே!
வருந்துவதா - வாடுவதா!
மகரந்தப் புன்னகையால் மற்றவர்களை வாழவைத்து மன்னிக்கும் கருணையினால் மாற்றார்க்கும் வாழ்வளித்த நடமாடும் பகுத்தறிவு நலிவடைந்து வருந்துவதா! நல்லோர்கள் உள்ளமெல்லாம் வேதனையில் வாடுவதா!
இந்தியாவின் முதுகெலும்பாய் இருப்பதே நீங்கள்தான், சங்கத் தமிழ் இன்று மருத்துவ மனையில்! தவிக்கும் என் உள்ளமோ உங்கள் நினைவில்!
தலையணையில் சாய்ந்தபடியே உன் தமிழ் ஆணைகள் தங்குதடையில்லாமல் அன்றாடம் ஆட்சியை நடத்துகின்றன. சூது மதியினர் சுரண்டல் வாழ்வைச் சொந்த வாழ்வாக்கிக் கொண்டவர்கள், அந்தி வந்தால் ஆறலை கள்வர்கள் ஆட்டம் போடுவார்கள்!
எந்த வயதில் என்ன போராட்டம் ...
இந்த நேரத்தில் இது என்ன தாங்க முடியாத இடி! நீ உண்ணாமல் இருந்தால் உலகம் தாங்காது! எந்த வயதில் என்ன போராட்டம்! இருக்கின்ற நாங்கள் உன்னால்தான் உண்ணுகிறோம்! ஊர் நலத்தை எண்ணுகிறோம். எல்லாம் நலமாகும்! எங்கள் பணி உரமாகும்
மன்றாடி வேண்டுகிறோம். மாமன்னன் உண்ணும் கவளம்தான் உங்கள் உயிர்மூச்சைத் தளிர்க்க வைக்கும்! பொங்கு தமிழ் விரைவில் பூரண நலம் பெற வேண்டும்! மருத்துவ மனை உன்னை மகிழ்வோடு அனுப்பும் நாள், எங்கள் மனவயல்களில் இன்பமழை பொழியும் நன்னாள் என்று ரொம்பவே உருகியுள்ளார் ஜெகத்ரட்சகன்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications