6 மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் மாற்றம்!
மதுரை: மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகி வரும் விஜய்காந்த் மதுரை, கோவை, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்ட தேமுதிக நிர்வாகிகளை அதிரடியாக மாற்றியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுரை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர்களாக திருஞானசம்பந்தர், சுரேஷ்குமார், கேப்டன் மன்ற செயலாளர் வல்லரசு மாணிக்கம், மதுரை மேற்கு ஒன்றியச் செயலாளர் கணேசன், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் காமாட்சிராஜா ஆகியோர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை வடக்கு மாவட்டத்தில் காரமடை ஒன்றியச் செயலாளராக ராமலிங்கம் மற்றும் பேரூராட்சி செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் தெற்கு மாவட்ட பொருளாளராக டி.கோபால், துணைச் செயலாளர்கள் சேகர், மகேஷ்குமார், பாலசுப்பிரமணியம், முத்துவெங் கடேஷ்வரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், கணேஷ் குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, முருகன், ராமமூர்த்தி, குப்புராஜ் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதே மாவட்டத்தில் ஒன்றிய செயலாளர்களாக உள்ள செல்வரத்தினம் (உடுமலை), சுரேஷ் (மடத்துக்குளம்), பச்சையப்பன் (கொடிமங்கலம்) ஆகியோரும் புதிதாக நியமனமிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட துணை செயலாளர்கள் பிரகாஷ், மணிகண்டன், தலைமை செயற்குழு உறுப்பினர் குடந்தை ஜெய்லானி மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி நகர பொறுப்பாளராக தலைமை பொதுக்குழு உறுப்பினர் என்.தனபால், முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர்களாக முருகேசன் ஆகியோர் புதிதாக நியமிக்கப் பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகரச் செயலாளர்களாக பதவி வகித்த ஜெயச்சந்திரன் அப் பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
அவருக்கு பதிலாக மாவட்ட வழக்கறிஞர் அணி துணைச் செயலாளராகவும், திண்டிவனம் நகரச் செயலாளராகவும் பி.வெங்கடேசன் நியமிக்கப்படுகிறார் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications