புலிகள் தாக்குதலில் புதுக்குடியிருப்பில் 1000 ராணுவ வீரர்கள் பலி

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரம் விடுதலை புலிகளின் கைவசம் உள்ளது. இதை கைப்பற்ற இலங்கை ராணுவத்தினர் குண்டு மழை பொழிந்து வருகின்றனர். இருந்தாலும் புலிகள் அவர்களை எதிர்த்து கடுமையாக போரிட்டு வருகின்றனர்.
இலங்கை ராணுவத்தின் 53வது, 58வது, 59வது படைப் பிரிவுகளும் மற்றும் இரண்டு சிறப்பு படைப்பிரிவு என மொத்தம் ஐந்து பிரிவுகள் இந்நகரில் ஐந்து முனைகளில் இருந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
புதுக்குடியிருப்பு நகரைப் பிடித்து விட்டதாக ராணுவம் கூறியுள்ளபோதிலும் இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக அங்கு விடுதலை புலிகள் அதிரடி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சுமார் 1000 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 3 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவத்தினர் படுகாயம் அடைந்துவிட்டதாகவும் விடுதலை புலிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று 21 தமிழர்கள் படுகொலை
இந்த நிலையில் நேற்று நடந்த ராணுவத் தாக்குதலில் 21 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
.
மாத்தளன் மருத்துவமனைக்கு அருகில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது நேற்று காலை 5 மணியளவில் சிறிலங்கா படையினர் பீரங்கி தாக்குதலை நடத்தினர்.
இதில் 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதலின் போது மருத்துவமனையின் சுவர் மற்றும் கூரை ஆகியவை சேதமடைந்தன. சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கி தாக்குதலில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 32 பேர் காயமடைந்துள்ளனர்.
புதுக்குடியிருப்பில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்விடங்கள் மீது நேற்று பிற்பகல் சிறிலங்கா வான் படையின் மிக்-27 ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 வயதுச் சிறுவன் உட்பட 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications