மீண்டும் வாயிலிருந்து லிங்கம் எடுத்த பிரேமானந்தா!

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே ஆஸ்ரமம் நடத்தி வந்த பிரேமானந்தா கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் சிக்கினார். இதில் நீதி மன்றத்தால் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
அவரது ஆசிரமம் வழக்கம் போல் இயங்கி வருகிறது. இந்நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு அவர் பரோலில் வெளிவந்தார். இதையடுத்து அவரது ஆசிரமத்தில் சிவராத்திரி சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் கலந்து கொண்ட பிரேமானந்தா வழக்கம் போல் வாயிலிருந்து லிங்கம் ஒன்றை வரவழைத்து பக்தர்களை உற்சாகப்படுத்தினார். இதன் பின்னர் ஆஸ்ரம நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்பு, அங்கு தங்கியுள்ள வெளி நாட்டு பக்தர்களுடன் கலந்துரையாடினார்.
பரோல் முடிந்து அவர் வரும் 27ம் தேதி மீண்டும் சிறைக்கு செல்ல இருக்கிறார்.
சிறைக்குப் போனாலும் பிரேமானந்தாவிடம் அந்த பழைய ஸ்டைல் இன்னுமே மாறவே இல்லை போலிருக்கு..












Click it and Unblock the Notifications