மதுரையில் கதர்கிராம ஊழியர்கள் உண்ணாவிரதம்!
மதுரை: பதவி உயர்வு, இடைக்கால நிவாரண ஊதியம் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் கதர்கிராம தொழில் வாரிய ஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
தமிழ்நாடு கதர்கிராம தொழில்வாரிய ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தென்மண்டல அளவில் ஒருநாள் மதுரை மேலமாசிவீதி, வடக்கு மாசி வீதி சந்திப்பில் உண்ணாவிரதம் இருப்பது என முடிவு செய்யப்பட்டடது.
அதன்படி, இந்த கூட்டமைப்பின் மாநில அமைப்பு செயலாளர் நல்லசிவம் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதத்தில் மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.
ஆறாவது ஊதியக் குழுவில் பரிந்துரை செய்யப்பட்டபடி 3 மாத ஊதிய இடைக்கால நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு கதர்கிராம தொழில் வாரியத்தை முன்பு இருந்ததுபோல அரசுத்துறையாக அறிவிக்க வேண்டும் என்றும், வாரியத்தில் அதிகப்படியாக இருக்கும் 862 ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளித்து வேறு துறைகளில் பணி வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என உண்ணாவிரதத்தின் போது கோரிக்கைவிடப்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications