நார்வே: இந்திய தூதரகம் முன் தமிழர்கள் போராட்டம்
நார்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்த இக் கவனஈர்ப்பு போராட்டம் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை நடைபெற்றது.
தமிழர்கள் மீது இலங்கை கட்டவிழ்த்து விட்டுள்ள இன அழிப்புப் போரை நிறுத்துவதற்குரிய கடமை இந்தியாவிற்கு உள்ளது போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள், இந்தியாவை வலியுறுத்தும் கோரிக்கைகளை வெளிப்படுத்தும் பதாகைகளைத் தாங்கி நின்றனர்.
- போர் நிறுத்தத்தின் அவசியம் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் வேண்டுகோளுக்கு ஏற்ப நிபந்தனையற்ற உடனடிப் போர் நிறுத்தத்தினை ஏற்படுத்துவதற்கு இந்தியா உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
- தமிழர்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் இன அழிப்பினை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும்
- ஐக்கிய நாடுகள் சபையின் உதவி நிறுவனங்கள், அனைத்துலக உதவி நிறுவனங்கள், அனைத்துலக கண்காணிப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை வன்னிக்குள் செல்ல அனுமதித்தல் வேண்டும்.
- தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்
- தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா விலக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டது.
போராட்டத்தின் இறுதியாக நார்வே நாட்டுக்கான இந்தியத் தூதர் பான்பிட் ராயிடம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கான கோரிக்கை மனுவை கோரிக்கை மனுவை தமிழர் பிரதிநிதிகள் அளித்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!













Click it and Unblock the Notifications