இடம்பெயர்ந்த தமிழர்கள் நன்றாக இருக்கிறார்கள் - கூறுகிறார் ஐ.நா. இணைச் செயலாளர்

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையில் நடக்கும் போர் பகுதிகளில் அப்பாவித் தமிழர்கள் தினசரி கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
தினசரி குறைந்தது 20 பேராவது உயிரிழந்து கொண்டுள்ளனர். இதுவிர சிகிச்சை பெற வழியில்லாமல் ஏராளமானோர் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர்.
போதிய வசதிகள் இல்லாத தற்காலிக கூடாரங்களில் தமிழர்கள் சொல்லொணாத் துயரத்துக்கிடையே உயிரைக் கையில் பிடித்து வாழ்ந்து வருகின்றனர்.
வன்னிப் பகுதியில் சுமார் இரண்டு லட்சம் தமிழர்களுக்கு மேல் சிக்கி, உயிருக்கு போராடி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் அங்கு ஐநாவின் மனிதபாதுகாப்பு விவகார பிரிவின் இணைச் செயலாளர் ஜான் ஹோம்ஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
ஒரு வார சுற்றுப்பயணத்துக்கு பின் நியூயார்க் திரும்பிய அவர் ஐ.நா. பாதுகாப்பு சபையில் தனது பயணம் தொடர்பான அறிக்கையை வைத்தார்.
அந்த அறிக்கையில், இடம் பெயர்ந்த தமிழர்கள் தங்கியுள்ள தற்காலிக முகாகம்களில் நிலைமை ஏறக்குறைய நன்றாகவே உள்ளது. அவர்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகளும் கிடைக்கின்றன.
இருப்பினும் போர் தீவிரமடைந்துள்ள குதியில், 14 சதுர கிலோமீட்டர் பரப்பளவே உள்ள பகுதியில் குறைந்தது 2 லட்சம் தமிழர்களாவது சிக்கியுள்ளனர். இவர்களின் நிலை கவலைக்குரியதாகவும் கேள்விக்குரியதாகவும் உள்ளது.
இவர்கள் ஒரே இடத்தில் இருக்க முடியாமல் பலமுறை பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து கொண்டுள்ளனர். இரு தரப்புக்கும் இடையிலான போரில் சிக்கி உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் ஹோம்ஸ் வைத்த அறிக்கை குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடம் பெயர்ந்து வந்தவர்கள் தங்கியுள்ள முகாம்களில் நேரடியாக நடத்திய ஆய்வுகள் மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் ஹோம்ஸ்.
இலங்கை அரசு எடுத்துள்ள நடவடிக்கைள் திருப்திகரமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
அப்பாவித் தமிழர்கள் கொத்துக் கொத்தாக படுகொலையாகி வரும் நிலையில், மனிதாபிமான வசதிகள் அனைத்தும் தமிழர்களுக்கு்க் கிடைத்து வருவதாக ஐ.நா. இணைச் செயலாளர் அறிக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications