யு.கே நாடாளுமன்றம் முன் ஈழத் தமிழர் தீக்குளிப்பு

இலங்கை ராணுவம் நடத்தி வரும் இனப்படுகொலையை கண்டித்து உலகம் முழுவதும் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பல்வேறு நாடுகளிலும் அயராமல் போராடி வருகின்றனர்.
அதேசமயம், பல தமிழர்கள் தீக்குளிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 14ம் தேதி லண்டனில் உள்ள இங்கிலாந்து பிரதமர் வீட்டின் முன்பு சுமார் 5 ஆயிரம் தமிழர்கள் இலங்கையில் இருக்கும் அப்பாவி தமிழர்களை காக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 26 வயதான இலங்கை தமிழர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.
ஆனால் சரியான சமயத்தில் போலீசார் அவரது முயற்சியை தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில் 27ம் தேதி மாலை சுமார் 4 மணி அளவில் மத்திய லண்டனில் உள்ள நாடாளுமன்ற சதுக்கம் முன்பு இலங்கை தமிழர் ஒருவர் தலையில் பெட்ரோலை ஊற்றி கொண்டு தீக்குளித்தார்.
அங்கிருந்த போலீசார் தீயை உடனடியாக அணைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு வயது 43. அவர் குறித்த பிற விவரங்கள் தெரியவில்லை.
இது குறித்து லண்டன் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், அவர் படுகாயம் அடைந்திருந்தாலும், அவரது நிலைமை கவலைக்கிடமான கட்டத்தை தாண்டிவிட்டது என்றார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications