கூட்டணி: அதிமுகவுடன் சரத் பவார் பேச்சு
நாசிக்: நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் தேசிய அளவில் கூட்டணி இல்லை என்ற தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் காங்கிரசை எதிர்க்கும் கட்சிகள் வரிசையில் நாங்களும் இணைய வேண்டியிருக்கும் என சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் கூட்டணி வைத்தால் சரத் பவார், லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் மற்றும் பஸ்வான் தங்கள் கட்சிகள் செல்வாக்குடன் இருக்கும் மாநிலங்களை தவிர்த்து அருகிலிருக்கும் மற்ற மாநிலங்களில் இடம் வேண்டும் என கேட்பார்கள்.
இதனால் தங்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்துவிடும் என்பதால அதை காங்கிரஸ் கட்சி நிராகரித்தது. இதையடுத்து தேசிய அளவில் கூட்டணி இல்லை என்ற திட்டத்தை காங்கிரஸ் முன்வைத்தது.
இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் தங்களுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
ஆனால், காங்கிரஸ் கட்சியோ, தேசிய அளவில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளமாட்டோம் என்பதில் பிடிவாதமாக இருக்கிறது. இதையடுத்து சரத் பவார், மகாராஷ்டிராவில் சிவ சேனாவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க போவதாக மிரட்டு வருகிறது.
எதிர்க்க தயங்கமாட்டோம்
இந்நிலையில் சரத்பவார் நாசிக் நகரில் அளித்த பேட்டியில்,
தேசிய அளவில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளமாட்டோம் என்ற முடிவை காங்கிரஸ் மறுபரிசீலனை செய்யும் என்று நம்புகிறேன்.
தேசிய அளவிலான கூட்டணி அமைந்தால் அது அனைவருக்கும் நல்லது. அப்போதுதான் நாட்டின் வளர்ச்சிப்பாதையில் ஸ்திரத்தன்மை இருக்கும். ஒருவேளை அப்படி நடக்காமல் போனால் நாங்கள் மாற்றுத் திட்டம் பற்றி சிந்திப்போம்.
தேசிய அளவில் கூட்டணி கிடையாது, மாநில அளவில் மட்டுமே கூட்டணி என்றால் காங்கிரசை எதிர்க்கும் கட்சிகளின் வரிசையில் நாங்களும் சேரவேண்டி வரும்.
இந்த பிரச்சினையில் காங்கிரஸ் தனது முடிவை நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவாவது தெரிவிக்கவேண்டும்.
இது குறித்து காங்கிரசுக்கு நாங்கள் கெடு விதிக்க இயலாது. சிறிய கட்சியான நாங்கள் காங்கிரஸ் போன்ற பெரிய கட்சிக்கு எவ்வாறு கெடு விதிக்க இயலும்?
அதிமுகவுடன் பேச்சு...
மராட்டியத்தில் நாங்கள் கேட்கும் தொகுதிகளை (24 தொகுதிகள்) தராவிட்டாலும் கூட்டணி பற்றி மறுபரிசீலனை செய்வோம். தற்போது நாங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில்தான் இருக்கிறோம்.
தேசிய கூட்டணி விவகாரத்தில் எங்களது கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளாவிட்டால், நாங்கள் எங்களது பாதையில் சென்று கொண்டிருப்போம்.
அதன்படி ஆந்திரா, தமிழ்நாடு, அரியானா, ஒரிஸ்ஸா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்வோம்.
மராட்டியத்திற்கு வெளியே 20 தொகுதிகள் வரை நாங்கள் போட்டியிட விரும்புகிறோம். தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
எனினும், இந்தக் கட்சித் தலைவர்களிடம் நாங்கள் காங்கிரசுடன், தேசிய அளவில் கூட்டணி வைத்துக் கொள்ளவே விரும்புகிறோம் என்பதையும் தெரிவித்து இருக்கிறோம் என்றார் சரத்பவார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications