பிரபாகரன்-வைகோ 'தொடர்பு'!!: 'படம்' காட்டும் இலங்கை ராணுவம்!!
ராஜ்யசபா எம்.பியாக, திமுகவில் வைகோ இருந்தபோது (அப்போது அவரது பெயர் வை.கோபாலசாமி) இலங்கை சென்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்தித்தார் வைகோ.
இந்தச் சந்திப்பு குறித்து அப்போதே புகைப்படங்கள் எல்லாம் தமிழக பத்திரிக்கைகளில் வெளிவந்துவிட்டன. மேலும் இந்த சந்திப்ப வீடியோவும் அப்போதே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தனது குடும்பத்தினரிடமோ திமுகவில் யாரிடமுமோ தெரிவிக்கால் இலங்கை சென்று வந்தார் வைகோ.
இந் நிலையில், வைகோவும், பிரபாகரனும் இருப்பதைப் போன்ற புகைப்படங்களையும், வீடியோ படங்களையும் இலங்கை ராணுவம் வெளியிட்டு, இருவருக்கும் உள்ள 'தொடர்புகள்' உறுதியாகியுள்ளதாகக் கூறியுள்ளது.
இந்தப் படங்களில் வைகோவும், பிரபாகரனும் காணப்படுகின்றனர். வைகோ படு இளமையாக இருக்கிறார். ஒரு படத்தில் வைகோ விடுதலைப் புலிகளின் சீருடையில், துப்பாக்கியை சுடுவது போல நீட்டி பிரபாகரனுடன் போஸ் கொடுத்துள்ளார்.
இந்தப் பழைய படங்களை தற்போது கண்டுபிடித்து எடுத்துள்ள இலங்கை ராணுவம், அவற்றை தனது இணையத் தளத்தில் (http://defence.lk/new.asp?fname=20090301_02) வெளியிட்டு, விடுதலைப் புலிகளுக்கும், வைகோவுக்கும் தொடர்பு இருப்பது உறுதியாகி விட்டதாக கூறியுள்ளது.
இன்னொரு படத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவருடன் பேசுவது போல உள்ளது.
அதேபோல ஜார்ஜ் பெர்னாண்டஸ், வைகோ உள்ளிட்டோருடன் சில புலிகள் அமைப்பினர் இருப்பதைப் போன்ற படமும் உள்ளது. இந்தப் படங்களை எங்கு பிடித்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
இலங்கை ராணுவம் கொடுத்துள்ள இந்தப் படங்களை வைத்து வட இந்திய மீடியாக்களும் ஏதோ இப்போது தான் இந்தப் படங்களே வெளியானது மாதிரி செய்திகளை வெளியிட்டுள்ளன.
-
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?













Click it and Unblock the Notifications