சென்னை-90 போலீஸ் அதிகாரிகள் மாற்றம்
சென்னை: தொடர்ந்து பல ஆண்டுகளாக சென்னையில் வேலை பார்த்த 59 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 15 உதவி கமிஷ்னர்கள் உட்பட 90 பேர் மற்ற தமிழக நகரங்களுக்கு மாற்றப்ப்டடுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் வரும் நிலையில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் வேலை பார்க்கும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்லது.
இதையடுத்து இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் பணியாற்றி வந்த 15 உதவி கமிஷனர்கள் மற்றும் 75 இன்ஸ்பெக்டர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கிண்டி உதவி கமிஷ்னர் நடராஜன் திருவொற்றியூருக்கும், திருவொற்றியூர் உதவி கமிஷ்னர் முரளி மகாகவி பாரதி நகருக்கும், மகாகவி பாரதி நகர் உதவி கமிஷ்னர் கண்ணப்பன் சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கும், தஞ்சாவூர் டிஎஸ்பி ரொசாரியோ நுங்கம்பாக்கம் உதவி கமிஷ்னராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
துரைப்பாக்கம் உதவி கமிஷ்னர் ராதாகிருஷ்ணன் பூக்கடைக்கும், பூக்கடை உதவி கமிஷ்னர் பாலசந்திரன் போலீஸ் தொழில்நுட்பப் பிரிவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்களை தவிர மேலும் சில உதவி கமிஷ்னர்கள் உள்பட மொத்தம் 15 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல மூன்று ஆண்டுகளுக்கு மேல் சென்னையில் பணிபுரிந்து வந்த 59 போலீஸ் இன்ஸ்பெக்டர்களும், சொந்த ஊரான சென்னையில் வேலை பார்த்து வந்த 16 இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 75 இன்ஸ்பெக்டர்கள் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் உள்ளிட்ட இடங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து மற்ற நகரங்களிலும் ஒரே இடத்தில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகள் விரைவில் மாற்றப்பட உள்ளதாக தெரிகிறது.
-
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
திருவாரூர் மக்களுக்கு குட்நியூஸ்.. விஜயை டேக் செய்த மத்திய அமைச்சர்! -
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications