பாகிஸ்தான்- ஓயும் சர்வதேச 'விளையாட்டுகள்'!
சென்னை: லாகூரில் நடந்துள்ள தீவரவாத சம்பவத்தால் கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களின் சர்வதேச அமைப்புகள், பாகிஸ்தானில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த தடை விதிக்கக் கூடும் என்ற சூழ்நிலை எழுந்துள்ளது.
ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியும், இங்கிலாந்து அணியும் பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் விளையாட மறுத்து வந்தன. தீவிரவாத அபாயம் அதிகமாக இருப்பதாக இவை கூறி வந்தன.
தற்போது இலங்கை அணி வீரர்கள் மீது நடத்தப்பட்ட பெரும் தாக்குதல் இவர்களின் வாதத்தை நிரூபிப்பது போல அமைந்து விட்டது.
எனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளின் கிரிக்கெட் அணிகள் இனி பாகிஸ்தானுக்கு வருமா என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
லாகூர் சம்பவத்தால், பாகிஸ்தானில் சர்வதேச அளவிலான போட்டிகள் இனி நடைபெறுவதும் கேள்விக்குறியாகியுள்ளது. லாகூர் சம்பவத்தைக் காரணம் காட்டி கிரிக்கெட், ஹாக்கி உள்ளிட்ட போட்டிகளுக்கான சர்வதேச அமைப்புகள் பாகிஸ்தானை தவிர்க்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடத்தப்படாமல் ரத்து செய்யப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
இந்திய விளையாட்டு அணிகளும் தற்போதைக்கு பாகிஸ்தான் பற்றி நினைத்துக் கூட பார்க்க மாட்டாது என கருதப்படுகிறது.
எனவே லாகூர் சம்பவத்தால் பாகிஸ்தான் விளையாட்டுத் துறை பெரும் பாதிப்பை சந்திக்கும் என கருதப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications