திமுகவிடம் 3 தொகுதிகள் கோருவோம்-திருமா
திருச்சி: நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்ந்தால் சிதம்பரம் உள்ளிட்ட மூன்று தொகுதிகளை கேட்போம் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
உள்ளாட்சித் தேர்தலில் இருந்து தமிழகத்தில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில்தான் விடுதலை சிறுத்தைகள் இருந்து வருகிறது.
காங்கிரஸ் கட்சியும், திமுகவும் இணைந்த கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணிதான். இந்தக் கூட்டணிக்கும் எங்களுக்கும் தொடக்கத்திலிருந்தே எந்த உறவும் கிடையாது. திருமங்கல இடை தேர்தலிலும் காங்கிரசார் இதையே கூறியுள்ளனர்.
எனவே, ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் நாங்கள் இருக்கிறோமா? இல்லையா? என்பதை திமுகதான் தெரிவிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியுடன் நேரடி உறவுக்கு வாய்ப்பே இல்லை. தொகுதி உடன்பாடு மட்டும் வரலாம். திமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் சிதம்பரம் உள்ளிட்ட 3 மக்களவைத் தொகுதிகளைக் கோருவோம்.
நாளை நடை பயணம்:
ஈழத்தில் போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும் என்ற பிரணாபின் கோரிக்கையை இலங்கை அரசு உடனே மறுத்துள்ளது. இதை காரணமாக வைத்து இந்தியா ராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும்.
நீண்ட அழுத்தத்துக்குப் பிறகு பிரணாப் போர் நிறுத்தம் கோரினார் என்ற மகிழ்ச்சி ஏற்பட்டாலும், போர் நிறுத்தம் கேட்பதைப் போல கேட்கிறோம் நீங்கள் மறுத்துவிடுங்கள் என்று முன்கூட்டியே அவர்கள் பேசி வைத்துக் கொண்டு கோரியதாகத் தெரிகிறது.
'நாம் தமிழர்' நடை பயணம் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு நடக்கும் என்றார் திருமாவளவன்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications