தேர்தல் பணிக்கு 1.25 லட்சம் ஆசிரியர்கள், பாதுகாப்புக்கு 1 லட்சம் போலீஸார்
சென்னை: தமிழக தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஒரு லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்கள் தவிர பதட்டமான வாக்குச் சாவடிகள் மற்றும் தொகுதிகளில் துணை ராணுவப் படையினரும் பயன்படுத்தப்படவுள்ளனர்.
அதே போல 1.25 லட்சம் ஆசிரியர்கள் உள்பட சுமார் 2 லட்சம் அரசு ஊழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
தமிழகத்தில் மே 13ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. புதுச்சேரியிலும் அன்றைய தினமே வாக்குபபதிவு நடைபெறுகிறது.
தேர்தலையொட்டி ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. தமிழகம் முழுவதும் தேர்தல் நாளன்று மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்த ஆலோசனைகள் மும்முரமாகியுள்ளன.
மொத்தமாக 1 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். போலீஸாரோடு இணைந்து ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் போலீஸார் ஆகியோரும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
பதட்டமான தொகுதிகள் மற்றும் வாக்குச் சாவடிகளில் துணை ராணுவப் படையினர் நிறுத்தப்படுவர்.
தேர்தல் பணியில் 1.25 லட்சம் ஆசிரியர்கள்:
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் கடந்த 2004ம் ஆண்டு தேர்தலின்போது 46,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தேர்தலில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்குச் சாவடிகள் வழக்கம்போல அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பஞ்சாயத்து கட்டிடங்கள், நகராட்சி கட்டிடங்கள் ஆகியவற்றில் தான் அமைக்கப்பட உள்ளன.
ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தலா 4 பேர் வீதம் கடந்த தேர்தலில் 1.84 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.
வாக்குச் சாவடிகளைத் தவிர மற்ற தேர்தல் பணிகளிலும் ஏராளமான அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதே போல இம்முறையும் 1.25 லட்சம் ஆசிரியர்கள் உள்பட சுமார் 2 லட்சம் அரசு ஊழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் என அனைத்து பள்ளி ஆசிரியர்களிலும் 50 சதவீதம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள் என்று பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே போல 3000க்கும் மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications