அதிமுக கூட்டணி மேலும் விரிவடையும்-பாண்டியன்
சென்னை: அதிமுக கூட்டணி மேலும் விரிவடைய வாய்ப்பு உள்ளது. சிபிஐ சார்பில் அதிமுகவுடன் இன்று முதல் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுக்கள் தொடங்குகின்றன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகம் (பாலன் இல்லம்) இடிக்கப்பட்டு புதிய முறையில் நவீன கட்டடமாக எழும்பவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம், நடிகர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பாண்டியன் பேசுகையில்,
நாங்கள் ஏற்கனவே அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம். மார்க்சிஸ்டும் இடதுசாரிகள் கூட்டணியில் உள்ளது. ம.தி.மு.க.வும் கூட்டணியில் உள்ளது. கூட்டணி மேலும் விரிவுப்படுத்தலாம். வரும் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு வெற்றி உறுதி.
தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காக நானும், எங்களது கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவர் நல்லகண்ணு, மாநில துணை செயலாளர் கோ.பழனிச்சாமி ஆகியோர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் அ.தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தையை தொடங்குகிறோம்.
கேள்வி:- உங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார்?
பதில்:- முதலில் மக்கள் தேர்ந்தெடுக்கட்டும். அதன் பிறகு நாங்கள் கூடிப்பேசி, திட்டம் வகுத்து, அதை யாரிடம் கொடுத்தால் சிறப்பாக செய்வார்கள் என்பதை பார்த்து பிரதமர் வேட்பாளரை அறிவிப்போம் என்றார் பாண்டியன்.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications