தமிழகத்திலிருந்து பிரச்சாரம் தொடங்கும் அத்வானி
சென்னை: தமிழகத்திலிருந்து தனது தேர்தல் பிரசாரத்தை பாஜக தொடங்குகிறது. வருகிற 7ம் தேதி நாகர்கோவிலில் அத்வானி பேசவுள்ளார்.
தமிழகத்தில் எந்தக் கட்சியும் பாஜகவை தனது கூட்டணியில் சேர்ப்பது குறித்து அக்கறை காட்டவில்லை. கடைசிக் கட்டமாகத்தான் அக்கட்சியை சேர்க்கலாம் என்ற யோசனையில் உள்ளன.
காத்திருந்து காத்திருந்து விரக்தியாகி விட்ட பாஜக தமிழகத்தில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் இல.கணேசன் கூறுகையில்,
நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முன்வந்தால் அவர்களை சேர்க்க தயாராக இருக்கிறோம். தமிழ்நாட்டில் எந்த எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து வருகிற 12-ந் தேதி முடிவு செய்து அறிவிப்போம்.
தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சி தனித்து போட்டியிட்டு தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறது. தமிழக பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியலை 15-ந் தேதி கட்சியின் மேலிடம் அறிவிக்கும்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் தமிழ்நாட்டில் இருந்து தொடங்கப்படுகிறது. வருகிற 7ம் தேதி அத்வானி தமிழ்நாட்டுக்கு வருகிறார். அப்போது அவர் 7ம்ந் தேதி மாலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
அத்வானி பிரதமராக வேண்டுமென்பதும் மக்கள் விருப்பமாகும். அதை விஜயகாந்த் உள்ளிட்ட தேசப்பக்த உள்ளங்களும், கட்சிகளும் உணர்ந்து புரிந்து கொண்டு எங்கள் அணியில் இணைய வேண்டும். விஜயகாந்திற்கு தனியாகவும் அழைப்பு விடுத்திருக்கிறோம் என்றார் கணேசன்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications